ETV Bharat / state

தமிழ்நாடு சிறப்பு பிரிவு காவலர் விஷம் குடித்து தற்கொலை - காவலர் விஷம் குடித்து தற்கொலை

பெரம்பலூர்: டெல்லி திகார் சிறையில் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் காவலராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

perambalur
perambalur
author img

By

Published : Feb 14, 2020, 4:36 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். டெல்லி திகார் சிறையில் எட்டாவது பட்டாலியன் படையில் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர், குடும்ப பிரச்னை காரணமாக மனவருத்தத்துடன் இருந்துள்ளார்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனை

இந்நிலையில் இன்று வீட்டில் யாருமில்லாத வேளையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரும்பாவூர் காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மாட்டுத்தீவனம் எடுத்துவரச் சொன்னதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.