பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு, பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன், “பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், ஏற்கனவே சட்டப் பேரவைக்கு அளிக்கப்பட்டிருந்த அறிக்கையில், இடம் பெற்றிருந்த நிலுவையிலிருந்த 4 உறுதிமொழிகளில் 2 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு, 2 உறுதிமொழிகள் நிலுவையிலிருந்தன.
-
அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது நீர்வளத்துறையின் சார்பில் கோனேரிப்பாளையம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதல் மற்றும் கரைகளை உயர்த்துதல் ஆகிய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது அதனை பார்வையிட்டு குழுவின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. pic.twitter.com/uEFkcWIgFP
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது நீர்வளத்துறையின் சார்பில் கோனேரிப்பாளையம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதல் மற்றும் கரைகளை உயர்த்துதல் ஆகிய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது அதனை பார்வையிட்டு குழுவின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. pic.twitter.com/uEFkcWIgFP
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது நீர்வளத்துறையின் சார்பில் கோனேரிப்பாளையம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதல் மற்றும் கரைகளை உயர்த்துதல் ஆகிய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது அதனை பார்வையிட்டு குழுவின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. pic.twitter.com/uEFkcWIgFP
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023
பேரவைக்காக 53 உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், 26 உறுதிமொழிகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டு உறுதிமொழி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர் கோனேரி ஆற்றின் குறுக்கே ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை பார்வையிட்டோம்.
-
50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட எறையூர் சக்கரை ஆலையானது முற்றிலும் செயல்படாத நிலைக்கு மாறி இருந்த நிலையில் அந்த சர்க்கரையை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளும் உள்ளூர் மக்களும் தொழிலாளர்களும் இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து… pic.twitter.com/dwJ74TIGW7
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட எறையூர் சக்கரை ஆலையானது முற்றிலும் செயல்படாத நிலைக்கு மாறி இருந்த நிலையில் அந்த சர்க்கரையை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளும் உள்ளூர் மக்களும் தொழிலாளர்களும் இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து… pic.twitter.com/dwJ74TIGW7
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 202350 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட எறையூர் சக்கரை ஆலையானது முற்றிலும் செயல்படாத நிலைக்கு மாறி இருந்த நிலையில் அந்த சர்க்கரையை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளும் உள்ளூர் மக்களும் தொழிலாளர்களும் இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து… pic.twitter.com/dwJ74TIGW7
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023
வேப்பந்தட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விடுதி 95 சதவீதம் பணிகள் முடிவுற்று விரைவில் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
-
அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அமைப்பது தொடர்பாக அரசு உறுதிமொழியின் அடிப்படையில் ரூபாய் 4.42 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதியை… pic.twitter.com/LACzKsxKXD
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அமைப்பது தொடர்பாக அரசு உறுதிமொழியின் அடிப்படையில் ரூபாய் 4.42 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதியை… pic.twitter.com/LACzKsxKXD
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அமைப்பது தொடர்பாக அரசு உறுதிமொழியின் அடிப்படையில் ரூபாய் 4.42 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதியை… pic.twitter.com/LACzKsxKXD
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023
எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள அனைத்து இயந்திரங்களும் பழுதடைந்து ஆலை இனி இயங்காது என்ற நிலைமைக்கு வந்து, ஆலை இழுத்து மூடப்படும் என்ற அபாயம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்த சூழலில், தமிழக அரசு அதற்காக இதுவரை ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது 4 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட ஒரு ஆலையாக புதிய நவீன கருவிகள் பொருத்தப்பட்டு அந்த ஆலை தற்போது நல்ல முறையில் இயங்கி வருகிறது.
-
அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது எறையூரில் சிப்காட் வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் உற்பத்தியை தொடங்க இருக்கின்ற கோத்தாரி காலனி பூங்காவை பார்வையிட்டதோடு அங்கு காலணிகள் உற்பத்தி செய்கின்ற முறை… pic.twitter.com/9LtIL7FJo8
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது எறையூரில் சிப்காட் வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் உற்பத்தியை தொடங்க இருக்கின்ற கோத்தாரி காலனி பூங்காவை பார்வையிட்டதோடு அங்கு காலணிகள் உற்பத்தி செய்கின்ற முறை… pic.twitter.com/9LtIL7FJo8
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது எறையூரில் சிப்காட் வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் உற்பத்தியை தொடங்க இருக்கின்ற கோத்தாரி காலனி பூங்காவை பார்வையிட்டதோடு அங்கு காலணிகள் உற்பத்தி செய்கின்ற முறை… pic.twitter.com/9LtIL7FJo8
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023
மேலும், 243 ஏக்கரில் சிப்காட் வளாகத்தில் கோத்தாரி காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதில் வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு காலணிகள் தயாரிக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலையில், உள்ளூர் நபர்களுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திற்குக் குழு பரிந்துரைத்துள்ளது.
பெரம்பலூர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பெரம்பலூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குத் தனி நுழைவாயில் அமைக்க வேண்டும் எனவும், அதற்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது.
-
அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மற்றும் சிகிச்சை முறைகள்,… pic.twitter.com/axmVzuSP2h
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மற்றும் சிகிச்சை முறைகள்,… pic.twitter.com/axmVzuSP2h
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மற்றும் சிகிச்சை முறைகள்,… pic.twitter.com/axmVzuSP2h
— Velmurugan.T (@VelmuruganTVK) December 22, 2023
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் இணை இயக்குநரிடமிருந்து மருத்துவமனைக்குத் தேவையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக்கூடிய அளவிற்கு மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனவும், பல்வேறு இதர பணியாளர் இடங்கள் நிரப்ப வேண்டும் எனவும், கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த கோரிக்கைகளையும் இக்குழு தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் 95% பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த கட்டிடத்தின் தரம் குறித்தும் குழு ஆய்வு செய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உறுதிமொழி குழு ஆய்வு செய்ததில், அனைத்து திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். கடந்த 2006 முதல் நிறைவு பெறாமல் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் செய்யப்படக்கூடிய தொழில்சார்ந்த பொருளாதார மண்டலம் என்ற திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் எதற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
10 முறை கூட்டம் நடத்தியும், அந்த நிறுவனம் பொருளாதார மண்டலத்தைக் கொண்டு வரவில்லை. எதிர்காலத்தில் அந்த நிலத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதால், நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் அந்த நிலத்தை மீண்டும் அரசுக்குச் சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக வருவாய்த்துறைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கும் நிலத்தைக் கையகப்படுத்த இக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இனி புதிய மருத்துவக்கல்லூரி வரப்பெற்றால் அது பெரம்பலூர் மாவட்டத்திற்குத் தான் முதலில் வழங்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைக்கின்றது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!