பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முகமது அலி, "பசும்பாலில் ரூ.1 லிட்டர் ரூ.28 லிருந்து ரூ.40 ஆக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும். தனியார் பால் விற்பனை நிறுவனங்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 12-ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெறும்," என தெரிவித்துள்ளார்.