விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, "தமிழ்நாட்டில் மட்டுமல்ல மத்தியிலும் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும். திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, மோடியை ஆட்சியிலிருந்து நீக்குகிற மகத்தான அரசியல் நகர்வை ஸ்டாலின் முன்னெடுப்பார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு