ETV Bharat / state

கிடப்பில் கிடந்த சிறுவாச்சூர் மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்! - Siruvacher bridge work

பெரம்பலூர்: 20 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த சிறுவாச்சூர் மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

siruvachur
siruvachur
author img

By

Published : Jan 19, 2020, 2:32 PM IST

பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். கோயிலுக்குச் செல்லும் நுழைவாயில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் சாலையைக் கடக்கும்பொழுது பக்தர்களும் பொதுமக்களும் சாலை விபத்தால் உயிர்பலி வாங்கும் இடமாக இப்பகுதி உள்ளது.

இந்நிலையில், இந்தப் பகுதியில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கக்கோரி பாலம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கையை எழுப்பியிருந்தனர். இதையடுத்து 2016ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்துத் துறை திட்ட இயக்குநர் பிரசாத் ரெட்டி தலைமையில் சிறுவாச்சூரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

siruvachur
சிறுவாச்சூர் சாலை

மேம்பாலம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 2018ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு மேம்பாலப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்கவேண்டும் என கோரிக்கை பரவலாக மக்கள் தரப்பில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், மேம்பாலம் அமைப்பதற்கு புதிய கட்டுமான நிறுவனம் தேர்வுசெய்து ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலப் பணிக்காக ரூ.13.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆறு வழிச்சாலை மேம்பாலம், ஏழு மீட்டர்கொண்ட இணைப்புச் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: விண்வெளி உடையணிந்து நூதனப் போராட்டம் - எதற்குத் தெரியுமா?

Intro:20 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சிறுவாச்சூர் மேம்பால பணிகள் 13.03 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் உறக்கம் சிறுவாச்சூர் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Body:பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுவாச்சூர் இங்கு உள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர் இதனிடையே இந்த கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் சாலையைக் கடக்கும் பொழுது பக்தர்களும் பொதுமக்களும் அதிக சாலை விபத்தால் உயிர்பலி வாங்கும் இடமாக இப்பகுதி உள்ளது இந்நிலையில் இந்த பகுதியில் சாலை விபத்துகளால் உயிர் இழப்பு தடுக்க கோரி பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் மத்திய மாநில அரசுகளிடம் எழுப்பினர் பொதுமக்கள் சார்பில் எழுந்த கோரிக்கையை அடுத்து கடந்த 6 7 2016 இல் மத்திய சாலை போக்குவரத்து துறை திட்ட இயக்குனர் பிரசாத் ரெட்டி தலைமையில் சிறுவாச்சூரில் கள ஆய்வு மேற்கொண்டனர் அதனை எடுத்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை முன்னாள் இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் இந்நிலையில் ஆய்வுக்குப் பிறகு இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு 6 6 2017இல் அனுமதி அளித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது மேலும் அப்போதைய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களால் 14 5 2018 மேம்பாலம் அணி அமைப்பதற்கான பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது பிறகு மேம்பாலம் அமைக்கும் பணியில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது இதனிடையே பால் அதற்கான கட்டுமான பணியின்போது வாகனங்கள் சாலையை கடந்து செல்ல வசதியாக அணுகு சாலை அமைக்கும் பணி மட்டுமே நிறைவடைந்தது ஆனால் மேம்பாலப் பணிகள் தொடங்கப்படவில்லை இந்நிலையில் மேம் பாலம் அமைப்பதற்கு புதிய கட்டுமான நிறுவன தேர்வு செய்து ஒப்பந்த விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது புதிய மேம்பால பணிக்காக ரூபாய் 13.03 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

Conclusion:இந்த ஆலையில் ஆறு வழிச் சாலை மேம்பாலம் 7 மீட்டர் கொண்ட இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.