பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் 2009 பிப்ரவரி 17ஆம் தேதி, தனது வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தகராறில் படுகொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறை ஏழு பேரைக் கைதுசெய்தது.
அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மலர் விழி, குற்றஞ்சாட்டப்பட்ட செல்வராஜ், சுந்தர்ராஜ், நல்லகண்ணு, நல்லுசாமி, செல்ல பிள்ளை, தங்கராசு, மணிகண்டன் அந்த ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
பின்னர், அந்த ஏழு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கால்வாயில் கார் சரிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மரணம்