பெரம்பலூர்: விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டம் பெரம்பலூர். இங்கு உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விதை திருவிழா நடந்தது.
இதில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். பாரம்பரிய காய்கறி விதைகள், நாட்டு விதைகள், மரபு வகை அரிசி வகைகள், சிறு தானிய வகைகள் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்பட்டன.
அது மட்டுமின்றி சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஆரோக்கியமான தின்பண்டங்கள், துணிப்பை வகைகளும் விற்கப்பட்டன. விழாவில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆடிப்பட்ட பருவம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் பாரம்பரிய விதைகளை வாங்க திருவிழாவில் குவிந்தனர்.
இதையும் படிங்க: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்