ETV Bharat / state

துணிப்பைகள் தயாரிப்பில் இறங்கிய தமிழ் ஆர்வலர்! - single use plastics effects

பெரம்பலூர்: ஒருமுறைப் பயன்படுத்தப்படும் நெகிழிக் கைப்பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை தயாரித்து, தமிழ் ஆர்வலர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

say-no-to-single-use-plastics-etv-bharat-nationwide-awareness-campaign
துணிப்பை
author img

By

Published : Nov 15, 2019, 8:20 PM IST

Updated : Dec 2, 2019, 11:55 AM IST

நெகிழியால் சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரச் சீர்கேடு மற்றும் புவிவெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீரழிவுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

இதனால் பெரம்பலூரில் நெகிழியின் தீமைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரான செந்தமிழ் வேந்தன் என்பவர் துணிப்பைகளைத் தயாரித்து வருகிறார்.

பெரம்பலூரில் நகர்ப்புறப் பகுதியில் வசித்து வரும் செந்தமிழ் வேந்தனுக்கு தமிழ் மீது தீவிரப்பற்று உள்ளது. பெரம்பலூர் பழையப் பேருந்து நிலையம் அருகில் உள்ள வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அச்சுத் தொழில் செய்துவந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு முறைப் பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப்பை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

ஈரோட்டில் இருந்து மொத்தமாக துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பெரம்பலூரில் துணிப்பையில் வாசகங்களை அச்சிட்டு வருகிறார்.

இவர் தயாரிக்கும் துணிப்பைகளில் 'நெகிழியைத் தவிர்ப்போம். நிம்மதியாக வாழ்வோம்' உள்ளிட்ட நெகிழியின் தீமைகள் விளக்க வாசகங்களோடு, திருக்குறள்களையும் பைகளில் அச்சிட்டு விற்பனை செய்கிறார்.

etv bharat nationwide awareness campaign
அச்சடிக்கும் பணியில் செந்தமிழ் வேந்தன்

இந்தத் துணிப்பைகளை திருவிழாக்கள், மளிகைக் கடைகள், இயற்கை வேளாண் நிகழ்வுகள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்குத் துணிப்பைகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

சாதாரணத் துணிப்பைகள் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை என்ற விலைக்கும்; பெரிய பைகள் ரூ.50 என விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் நெகிழியின் தீமையை உணர்ந்து துணிப்பையின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

துணிப்பைகள் தயாரிப்பில் இறங்கிய தமிழ் ஆர்வலரின் சிறப்பு தொகுப்பு!

இதையும் படியுங்க: கடந்தாண்டு 27 ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் எரிபொருளாக உபயோகம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Intro:பெரம்பலூரில் நெகிழி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணி பைகள் தயாரித்து வரும் தமிழ் ஆர்வலர் பற்றிய தொகுப்பு

Body:நெகிலி என்ற பிளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழல் மாசுபாடு சுகாதார சீர்கேடு மற்றும் புவிவெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீரழிவுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது இதனிடையே பெரம்பலூரில் நெகிழியின் தீமையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப்பைகளை தயாரிக்கின்றனர் தமிழ் ஆர்வலர் பெரம்பலூர் நகர்புற பகுதியில் வசித்து வருபவர் செந்தமிழ் வேந்தன் இவர் தமிழ் மீது தீவிர பற்று கொண்டவர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அச்சுத் தொழில் செய்துவந்த செந்தமிழ் வேந்தன் தற்பொழுது நெகிழிக்கு மாற்றாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளாக துணிப்பை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் ஈரோட்டில் இருந்து மொத்தமாக துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு பெரம்பலூரில் துணிப்பை வாசகங்கள் அச்சிடப்பட்டு இனிப்புகளை தயாரித்து வருகின்றார் இவர் தயாரிக்கும் துணிப்பைகளில் நெகிழியை தவிர்ப்போம் நிம்மதியாக வாழ்வோம் நெகிழியை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் மற்றும் நெகிழியின் தீமைகள் விளக்கம் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இது தயாரிக்கும் துணிப்பையில் அச்சிடப்படுகிறது மேலும் இந்த துணிப்பைகள் திருவிழாக்கள் மற்றும் இயற்கை வேளாண் நிகழ்வுகள் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் மற்றும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளுக்கும் துணி பைகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது தயாரிக்கும் பைகளில் நெகிழியின் தீமை விளக்கும் வாசங்கள் இல்லாமல் எந்த ஒரு துணிப்பை யும் அச்சிடப் படாது என்று தெரிவித்தார் மேலும் சாதாரண துணிப்பைகள் ரூபாய் 10 மற்றும் ரூபாய் 12 என்ற விலைக்கும் பெரிய வைகள் ரூபாய் ஐம்பது என என விற்கப்படுவதாக தெரிவித்தார் மேலும் பொதுமக்கள் நெகிழியின் தீமையை உணர்ந்து துணி பையின் அவசியத்த புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Conclusion:பேட்டி செந்தமிழ் வேந்தன் துணிப்பை தயாரிப்பவர் பெரம்பலூர்
Last Updated : Dec 2, 2019, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.