பெரம்பலூர் மட்டம் வேப்பந்தட்டை அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில் நேற்றிரவு (பிப்.15) வங்கியிலுள்ள சிசிடிவி கேமராக்களின் இணைப்பைத் துண்டித்து, வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
மேலும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அதேசமயம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகேயுள்ள ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகளின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
தொடர் திருட்டு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வணிகர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் காவலர்கள், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவல் துறையினர் பேச்சுவார்த்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க: மனைவியைக் கொலைசெய்த ராணுவ வீரருக்கு போலீஸ் வலை!