பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால் மாவட்ட அலுவலர்கள் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: உர மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்