கரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள MGR நகர் பகுதியில், கல் உடைக்கும் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் தவிக்கும் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பின் சார்பில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டு உதவி செய்யப்பட்டது.
இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கஞ்சி குடிப்பதற்குக் கூட எங்களுக்கு வழியில்லை... வாட்ஸ் ஆப்பில் பரவும் வீடியோ...!