ETV Bharat / state

விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் தனியார் தொழிற்சாலை - உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை! - land occupy issue in tamilnadu

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே தனியார் கிரஷர் தொழிற்சாலை ஒன்று, விளை நிலங்களை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நில உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளர்.

perambalur
author img

By

Published : Sep 21, 2019, 4:31 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கிரஷர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஆலத்தூர், இரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான கிரஷர் தொழிற்சாலை ஒன்று, தனது தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அதன் அருகிலுள்ள விவசாய விளை நிலங்களை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல், இத்தொழிற்சாலை ஊழியர்கள் அதேபகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான குளத்தில், எவ்வித முன் அனுமதியுமின்றி கிராவல் மண்ணையும் அள்ளி வருகின்றனர். இது குறித்து விளைநில உரிமையாளர்கள் கூறுகையில், "கிரஷர் தொழிற்சாலை உரிமையாளரிடம் இதுப்பற்றி முறையிட்டால், அவர் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்.

நிலங்களை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் தனியார் தொழிற்சாலை

மேலும் இது பற்றி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதில் அரசுத் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கிறோம்"இவ்வாறு கூறினர்.

இதையும் படிங்க:

’பராமரிப்பின்றிக் காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும்’ - பொதுமக்கள் கோரிக்கை

'பெரம்பலூரில் 14 ஏரிகளில் ரூ.3.48 கோடி மதிப்புள்ள சீரமைப்புப் பணி' - மாவட்ட ஆட்சியர் தகவல்!

Intro:பெரம்பலூர் அருகே தனியார் கிரஷர் நிறுவனத்திற்காக விளை நிலங்களை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணி . அனுமதியின்றி அள்ளப்படும் கிராவல் மண் .நடவடிக்கை எடுக்க கோரிக்கை.Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் அதிகப்படியான கிரஷர் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் வட்டம் இருர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான 3 கிரஷர் நிறுவனம் தனது கிரஷர்க்கு பொருட்களை எடுத்து செல்வதற்கு விவசாய விளை நிலங்களை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசு குளத்தில் எந்த வித அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் செல்வதாக வும். இது குறித்து கிரஷர் நிறுவனத்திடம் கேட்க சென்றால் விவசாயிகளை மிரட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.Conclusion:மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.