ETV Bharat / state

பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே எரிந்த நிலையில் இளைஞர் உடல்! - Perambalur Tasmac

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 21, 2023, 1:21 PM IST

பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பின்புறம் உள்ள ராசப்ப கவுண்டர் மகள் அமிர்தம் என்பவருக்கு சொந்தமான வயல் நிலத்தில், உடல் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர போலீசார் சோதனை செய்து விசாரணை செய்தலில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலம் கால் பகுதியை தவிர உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

உடல் எரிக்கப்பட்ட அந்த நபர் யார்? என்பது குறித்தும் அவரை எரித்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார், தடயவியல் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில் அருகில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி: சிறுத்தையா என அச்சத்தில் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.