பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைகுடிகாடு கிராமத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-மில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணம் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் பணம் வரவில்லை என்று நினைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அடுத்து பணம் எடுக்கவந்த லப்பைகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஹாஜி, ஜமால் ஆகியோர் சிறிது நேரங்கழித்து ஏடிஎம்-மில் வந்த ரூ.10 ஆயிரம் பணத்தை லப்பைகுடிகாடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் அப்துல் கப்பார் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, லப்பைக்குடிக்காடு ஸ்டேட் பேங்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணை செய்து, பணம் தவறவிட்ட நபரை அறிந்து நேற்று மங்கலமேடு காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளர் சிவகுமார் உள்பட காவலர்கள் பணம் தவறவிட்ட நபரின் உறவினரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். ஏடிஎம்-மில் பணம் தவறவிட்ட நபர் பணம் மீட்டு கொண்டு வந்த நபர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை!