ETV Bharat / state

ஊரடங்கை மீறியதாகப் பெரம்பலூரில் 2,558 வழக்குகள் பதிவு

author img

By

Published : Apr 20, 2020, 12:09 PM IST

பெரம்பலூர்: ஊரடங்கை மீறியதாக மாவட்டத்தில் இதுவரை 2,558 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

perambalur  District Superintendent  Office about lockdown cases

கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க மே 3ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உள்ளது.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளின்றி உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருந்ததாக பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர், குன்னம், மங்கலமேடு, கைகளத்தூர் எனப் பல்வேறு காவல் நிலையங்களில் இதுவரை 2,558 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் 2,704 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 1,621 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் 2,558 வழக்குகள் பதிவு

வாகன பரிசோதனையின்போது வெளியில் சுற்றித்திரிந்தவர்களிடம் கரோனா வைரஸ் நோய் தொற்று குறித்தும் அதன் பாதிப்பு குறித்தும் போக்குவரத்துக் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க... ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் மரச்சிற்பக்கலை தொழிலாளர்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.