ETV Bharat / state

6 லட்சம் மோசடி செய்த வட மாநிலத்தவர்களை ஸ்கெட்ச் போட்டு பிடித்த பெரம்பலூர் போலீஸ்!! - ஆன்லைன் மூலம் பணமோசடி

பெரம்பலூரை சேர்ந்தவரிடம் துபாயில் வேலைவாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் 6 லட்ச ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்த பீகாரை சேர்ந்த இருவரை பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசார் உத்திரபிரதேசத்தில் கைது செய்தனர்.

6 லட்சம் மோசடி செய்த வட மாநிலத்தவர்களை ஸ்கெட்ச் போட்டு பிடித்த பெரம்பலூர் போலீஸ்

author img

By

Published : Feb 2, 2023, 10:50 AM IST

பெரம்பலூர்: ரஞ்சித்குமார் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னிடம் துபாயில் வேலைவாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 6 லட்சத்து 23 ஆயிரத்து 952 ரூபாயை பெற்றுக்கொண்டு இரண்டு பேர் மோசடி செய்துவிட்டனர் என புகார் கூறியிருந்தார்.

அதன்படி வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து மோசடி நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீஸார் உத்திரபிரதேசம் காசியாபாத் பகுதியில் மோசடிசெய்து விட்டு பதுங்கியிருந்த விகாஸ்குமார் மிஸ்ரா, கௌதம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 2 லட்சத்து 10 ரூபாயை மீட்டதுடன் 1 சிபியூ, 5 செல்போன், 5 சிம்கார்டு, 14 ஏடிஎம் கார்டு, 5 வங்கி செக் புக் ஆகியவற்றை பறிமுதல் செய்த சைபர்கிரைம் தனிப்படை போலீஸார் பெரம்பலூர் அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து நடைமுறைகளை முடித்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆன்லைன் மூலம் பணமோசடி செய்து விட்டு உத்திரபிரதேசத்தில் பதுங்கி இருந்த பீகாரை சேர்ந்த இருவரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்த தனிப்படை போலீஸாருக்கு காவல் அலுவலர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் 2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.