நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வருகின்ற மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கின் மத்தியில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொருள்களான முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்டவற்றை பொது மக்களுக்கு வழங்கியும், அப்பகுதியில் சுற்றித் திரியும் வாயில்லா ஜீவன்களான நாய், பூனைகளுக்கு உணவளித்தும் பெரம்பலூர் மாவட்டக் காவல் துறையினர் உதவி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது