கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே, தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனால், கோடை வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் தர்பூசணி, கரும்புச்சாறு, இளநீர், பழரசம், பழவகைகள் ஆகியவற்றை உட்கொள்கின்றனர்.
தற்போது, பாலக்கரைப் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கற்றாழைச்சாறு விற்பனை களைகட்டியுள்ளது. கற்றாழைச்சாறு, தூய்மையான குடிநீரில் சுத்தம்செய்யப்பட்டு எந்தவித கசப்புத் தன்மையும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு தரப்படுகிறது.
மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வாடிக்கையாளர்களைக் கவரும்வகையில் சிறப்பான முறையில் கற்றாழைச்சாறு செய்துதருகிறார். மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் இங்கு வந்து கற்றாழைச்சாறை அருந்திச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:தஞ்சையில் களைகட்டிய கற்றாழை ஜூஸ்