ETV Bharat / state

தேசிய கைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம்: பெரம்பலூர் வீரர்கள் சாதனை! - தங்கப்பதக்கம்

பெரம்பலூர்: தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற இரண்டு பெரம்பலூர் மாவட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் வீரர்கள்
author img

By

Published : Jul 30, 2019, 5:54 PM IST

மத்திய பிரதேசத்தில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் வயது வரம்பு அற்றோர் மற்றும் 23 வயதுக்கு உட்பட்டோர் என்ற இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அணிகள் பங்குபெற்றன. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி மராத்திய அணியோடு இரு பிரிவுகளிலும் மோதியது. முடிவில் இரண்டு பிரிவுகளிலுமே தமிழ்நாடு அணி தங்கப் பதக்கத்தை வென்றது. தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர்இடம்பெற்றிருந்தனர்.

பெரம்பலூர் வீரர்கள்

இதனிடையே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தங்கப் பதக்கம் வென்று பெரம்பலூருக்கு வந்த இருவருக்கும் அம்மாவட்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு வீரர்கள், ’தங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. மேலும், பல்வேறு சாதனைகள் புரிய நாங்கள் விடாமுயற்சி எடுப்போம்’ என்றனர்.

Intro:தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்ற தமிழக அணியைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட வீரர்கள் பாலாஜி மற்றும் மணிகண்டனுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு

Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலாஜி மற்றும் மணிகண்டன் இவர்கள் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர் அதனுடைய மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வயதுவரம்பு அற்றோர் மற்றும் 23 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் உள்ள தமிழக அணி சார்பில் பங்குபெற்றனர் இந்த தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பங்கு கொண்டன இந்நிலையில் இறுதிப் போட்டியில் தமிழக அணி மராத்திய அணியோடு இந்த இரண்டு பிரிவுகளிலும் மோதியது இதில் இரண்டு பிரிவுகளிலுமே தமிழக அணி தங்கப்பதக்கத்தை வென்று உள்ளது தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் இதனிடையே பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தங்கப்பதக்கம் என்று பெரம்பலூருக்கு வந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கும் பெரம்பலூர் இளைஞர்கள் மற்றும் பல்வேறு இளைஞர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தனர் மேலும் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு மேலும் பல்வேறு சாதனைகள் புரிய நாங்கள் விடா முயற்சி எடுப்போம் என்று கூறினார்

Conclusion:பேட்டி ஒன்று பாலாஜி பேட்டி-2 மணிகண்டன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.