பெரம்பலூர் மாவட்டம் பெருவாரியாக, மானாவாரி நிலங்களை கொண்ட மாவட்டமாகும். இங்கு மழையை நம்பியே பெருவாரியான மானாவாரி நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு மழையை எதிர்பார்த்தே விதைப்பு பணியை தொடங்கி வருகின்றனர்.
இந்நிலையில்,பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோயிலில் மழை வேண்டி கிராம மக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் அருமடல் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கஞ்சி வைத்து மாரியம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இதையும் படிங்க:
நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் - இரண்டாவது நாளாக தேடும் பணி!