தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் வாக்களிப்பதின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்சியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.