ETV Bharat / state

அரசை நம்பாமல் நீர் நிலைகளை மீட்கும் முயற்சியில் கிராம மக்கள்! - தூர்வாரப்பட்டது

பெரம்பலூர்: தமிழ்நாடு அரசை நம்பாமல் போதுமான நிதி திரட்டி ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றினைந்து நீர் நிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

paravaai pond
author img

By

Published : Jun 25, 2019, 7:01 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தில், கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் நீர் நிலைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பரவாய் பெரிய ஏரி ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டது. தற்போது ஊருக்கு நடுவே உள்ள அம்பட்டன் ஏரியை தூர்வாரி வருகின்றனர்.

அம்பட்டன் ஏரி சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஊரின் தென்கிழக்கு பகுதியில் மழை காலத்தில் வழிந்தோடும் உபரி நீர், சிறு ஓடை வழியாக இந்த ஏரிக்கு வந்து சேர்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் மக்களுக்கு குடிநீர் வழங்கிய பிரதான நீர் நிலை அம்பட்டன் ஏரி தான். கோடைக்காலத்தில் ஏரியில் நீர் வற்றியவுடன், ஏரியின் நடுவில் உள்ள பெரிய கிணற்றில் நீர் எடுத்துக் கொள்வார்கள். இப்போது அந்த ஏரியில் எந்த ஒரு கிணறும் இல்லை. ஏரிக்குள் பெரிய கிணறு இருந்தற்கு அடையாளமாக கட்டுக் தற்கள் மட்டுமே காணப்படுகின்றன.

பொதுக்குழாய் மூலம் தண்ணீர் விநியோகம், தனி நபர்கள் வீட்டுக்கு வீடு ஆழ்குழாய்கள் அமைத்துக் கொண்டதன் விளைவாக கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாத அப்பட்டன் ஏரி வறன்டு போனது. அதனை தொடர்ந்து, ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து முள் காடாக மாறியது. தற்போது மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியால் நிலத்தடி நீர் வளம் குறைந்து ஆழ் குழாய் கிணறுகளும் வறண்டன.

இதனிடையே தற்போது இந்த அம்பட்டன் ஏரியை இளைஞர்கள், கிராம பொது மக்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு அரசை நம்பாமல் போதுமான நிதி திரட்டி ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் உதவியுடன் சமன் செய்து, கரைகளை பலப்படுத்தி, நீர் நிலையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Intro:அரசை நம்பி இல்லாமல் சொந்த முயற்சியில் நீர் நிலைகளை மீட்கும் கிராம மக்கள்Body:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் ஊருக்கு நடுவில் அமைந்திருக்கும் "அம்பட்டன் ஏரியை " சீரமைக்க பணியை தொடங்கி உள்ளனர்" ஏற்கனவே - பரவாய் ஏரி பொதுமக்களால் தூர் வாரப்பட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:ஏரிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.