பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாதவி சாலை ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் ராஜா (65) என்பவர் மனு அளித்தார். அதில், “நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கரை பகுதியில் குடிசை வீடு கட்டி வசித்துவருகிறேன்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினர் நாங்கள் வசிக்கும் இடத்தில் நீ வசிக்கக் கூடாது என மிரட்டி எனது குடிசையை சேதப்படுத்தினர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கடந்த 12ஆம் தேதி பெரம்பலூர் வட்டாட்சியர், நகர காவல் துறையினர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதில் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் காவல் துறையினர் அவரை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதித்தப் பெண்ணின் மண்டையை உடைத்த ரயில்வே காவலர்