பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள சாலை பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இதனிடையே புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு இந்தப் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.