பெரம்பலூர் அருகே திம்மூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்தபோது டிராக்டர் மோதி ஜெயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஜெயலட்சுமி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஜெயலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.
ஊரக வேலை திட்டத்தில் சட்டவிரோதமாக எந்திரங்களை பயன்படுத்த அனுமதி தந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.