ETV Bharat / state

கருப்புப் பட்டை அணிந்து பணியை மேற்கொள்வோம் - அமைச்சுப் பணியாளர்கள் - கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்

பெரம்பலூர்: காவல் கண்காணிப்பாளர் தனது உத்தரவை திரும்பப் பெறும் வரை கருப்புப் பட்டை அணிந்து பணியை மேற்கொள்வோம் என பெரம்பலூர் மாவட்ட அமைச்சுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : May 31, 2020, 8:44 PM IST

Updated : May 31, 2020, 9:10 PM IST

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கடந்த 23ஆம் தேதியன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "சீருடை அணிந்த காவல் பணியாளர்கள் யாரும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சல்யூட் அடிக்கக் கூடாது. அவ்வாறு தனிப்பட்ட முறையில் சல்யூட் அடிப்பது விதிகளுக்கு புறம்பானது. ஏதாவது குறை இருந்தால் குறை தீர்க்கும் பெட்டியில் தெரிவித்து, தன்னை சந்திக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்பு அமைச்சுப் பணியாளர்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த சுற்றறிக்கை மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மாநாட்டில் கூடுதல் காவல் இயக்குநர் கூறுகையில்

அமைச்சுப் பணியாளர்களின் தீர்மானம்
அமைச்சுப் பணியாளர்களின் தீர்மானம்

1) காவல் துறையின் அஸ்திவாரமே அமைச்சுப் பணியாளர்கள்தான். காவல் பணியாற்றும் அலுவலர்களின் நிர்வாகத் திறமைக்கு பின்னால் அமைச்சுப் பணியாளர்கள் ஒளிந்திருக்கிறார்கள். காவல் கண்காணிப்பாளரின் இந்த உத்தரவு அமைச்சுப் பணியாளர்களின் கண்ணியத்தையும், நேர்மையையும் நிலைகுலைய செய்துள்ளது. மேலும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்

2) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த உத்தரவை திரும்ப பெறும்வரை கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற வேண்டும்.

அமைச்சுப் பணியாளர்களின் தீர்மான அறிக்கை
அமைச்சுப் பணியாளர்களின் தீர்மான அறிக்கை

3) தமிழ்நாடு முழுவதுமுள்ள காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் குறிப்பாணையை திரும்பப் பெறும் வரை கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற வேண்டும் என மத்திய சங்கத்தை கேட்டு கொள்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட தீர்மானங்கள் பெரம்பலூர் காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு!

Last Updated : May 31, 2020, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.