கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இதுகுறித்து ஃபேஸ்புக் மூலம் அவர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
இதனையறிந்த பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார், தனது சொந்த வாகனம் (பேருந்து) மூலம் அனுமதி பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து, சொந்த மாவட்டத்திற்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் ஊர்க்காவல் படை மண்டல தளபதிக்கு நன்றி தெரிவித்தனர்.