பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரைச் சேர்ந்தவர் 'டத்தோ' பிரகதீஸ்குமார். இவர் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களை நடத்திவருகிறார். 'டத்தோ' பிரகதீஸ்குமார் தனது சொந்த ஊர், பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார்.
இந்நிலையில், 'டத்தோ' பிரகதீஸ்குமார் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பன்னிரெண்டாம் மாணவ, மாணவிகள் 55 பேருக்கு முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கரோனா தடுப்புப் பொருள்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4,000 மாணவ, மாணவிகளுக்கும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் வழங்கினார்.