ETV Bharat / state

மனைவியை அரிவாளால் வெட்டிய நபர் கைது! - Tamil crime news

பெரம்பலூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துவந்த செவிலியரை அரிவாளால் வெட்டிய கணவரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

man-arrested-for-assaulting-wife
man-arrested-for-assaulting-wife
author img

By

Published : May 26, 2020, 10:04 PM IST

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா (36). செவிலியான இவருக்கு கண்ணன் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில், இம்மாதம் பணிமாற்றம் காரணமாக பெரம்பலூர் அருகேவுள்ள ரெங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெயா தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து, இன்று மாலை ரெங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கண்ணன், அவரது மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பொருமையிழந்த கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயாவை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஜெயாவை மீட்ட பொதுமக்கள், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தாக்குதல் நடத்திய கண்ணனையும் சிறை பிடித்த பொதுமக்கள், காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் கவரிங் செயினை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.