பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் மது பானங்கள், கள்ள சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
மாவட்டத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். மதுவிலக்கு, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓவியப்போட்டி, கோலப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவை நடைபெற்றன.
இந்தப் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் சோபா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு!