விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் மழையை நம்பியே பெருவாரியான நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிறைந்து வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இதில் குன்னம் தாலுகாவில் உள்ள கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஆகிய இரண்டு ஏரிகள் நிறைந்துள்ளது. மேலும், ஆயக்குடி ஏரி 50 சதவீதமும், மேலும் 8 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் நிரம்பி வருகிறது.
இதற்கிடைய மழைக்காலங்களுக்கு முன்னதாகவே அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, அதன் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதும், அதன் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றதே ஏரிகுளங்கள் நிரம்பி வருவதற்கான காரணம் என்று விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு கைகொடுக்காத பருவமழையால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். ஆனால் தற்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே செப்டம்பர் மாதத்தில் பெய்த மழையிலேயே ஏரிகள் நிரம்பியுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பெரம்பலூரில் ஏரிகள் குடிமராமத்து பணிகள் தொடக்கம்!