ETV Bharat / state

ஆ. ராசாவின் மனைவி இறப்புக்கு கே.எஸ். அழகிரி ஆறுதல் - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி இறப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி ஆறுதல்
கே.எஸ்.அழகிரி ஆறுதல்
author img

By

Published : Jun 1, 2021, 1:06 PM IST

நீலகிரி மக்களவை உறுப்பினரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி (53) சென்னையில் மே 29ஆம் தேதி காலமானார்.

சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் புற்றுநோய்க்காக கடந்த ஆறு மாத காலம் மருத்துவம் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆ. ராசாவின் மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 1) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கட்சி நிர்வாகிகளுடன் பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஆ. ராசாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் பலர் அவரிடம் ஆறுதல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திமுக எம்பி ஆ. ராசாவின் மனைவி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.