பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 5.5 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஆயிரத்து 200 மாணவர்கள் பயிலும் வகையில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறப்பு விழா கல்வெட்டினைத் திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.