பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வளாகத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2019-20ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தனர்.
தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் 400 மீட்டர் ஓட்டம், குழு விளையாட்டுப் போட்டிகள் டேபிள் டென்னிஸ் வாலிபால் துரோ பால் கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாவட்டத்திலுள்ள பல்வேறு சிறப்பு பள்ளிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் மாநில அளவில் தடகளம், நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க :ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்க்கும் டாமினிக் தீம்!