பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அறநெறி பகுதியைச் சேர்ந்த பார்த்தா என்கின்ற பார்த்திபன், பெரம்பலூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த டால்டா கண்ணன், திருநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற முருகானந்தம், துரைமங்கலம் வாசுகி தெருவைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோர் தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் பார்த்தா என்கின்ற பார்த்திபன், டால்டா கண்ணன், முருகானந்தம் ஆகியோர் கடந்த ஜூன் 7ஆம் தேதி, பெரம்பலூர் திருநகர் பகுதியில் நடந்த ரவுடி வீரமணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அரவிந்த் என்பவர் ஜூன் 1ஆம் தேதி, துறைமங்கலம் பகுதியில் நடந்த ரவுடி கபிலன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தா குற்றவாளிகள் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.