பெரம்பலூர் அருகே நெடுவாசல் பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன். இந்த குப்பைக் கிடங்கில் எதிர்பாராதவிதமாக இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்பு வீரர்கள், நகராட்சி அலுவலர்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் மரணமடைந்த கூடைப்பந்து நட்சத்திரம்!