பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் தேனீ பிடிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
சில விஷமுள்ள தேனீக்கள் பொதுமக்களை கொட்டினால் பாதிக்கப்படுவர். இதனால், பாதுகாப்பான முறையில் தேனீக்கள் பிடிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில், தேனீக்கள் பிடிப்பது குறித்து பயிற்சி பெற்ற நபரால் செயல் விளக்கம் காட்டினர்.
பொதுமக்கள் தேனீக்களைப் பிடிக்கும்போது எவ்வகை பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பிடிக்க வேண்டும் என்ற செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தீயணைப்பு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.