பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் மருந்தகத்தில் ராம்குமார் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பொழுது, நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டி வந்த ராம்குமார் பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: