பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவு விவரம் பின்வருமாறு:
மாவட்ட கவுன்சிலர் பதவிகள்: மொத்தம் எட்டு இடங்களில் திமுக ஏழு இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி.
பெரம்பலூர் ஒன்றிய பதவிகள்: மொத்தம் 14 இடங்களில் திமுக ஒன்பது இடங்களிலும், அதிமுக மூன்று இடங்களிலும் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி.
வேப்பூர் ஒன்றிய பதவிகள்: இந்த ஒன்றியத்தில் மொத்தம் 23 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக பத்து இடங்களிலும், அதிமுக ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பாமக மூன்று இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள், ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.
வேப்பந்தட்டை ஒன்றிய பதவிகள்: மொத்தம் 21 இடங்கள் இந்த ஒன்றியத்தில் உள்ளன. இதில், திமுக பத்து இடங்களிலும், அதிமுக நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றன. பாமக இரண்டு இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள், ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. சுயச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றனர்.
ஆலத்தூர் ஒன்றிய பதவிகள்: மொத்தம் 18 இடங்களில் திமுக ஒன்பது இடங்களிலும், அதிமுக எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றன. மேலும் தேமுதிக ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் நான்கு ஒன்றியங்களிலுள்ள 76 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 21 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. மேலும் அமமுக ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஐந்து இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் முடிவு: தம்பதி அசத்தல்!