திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஆ. ராசா எம்.பி. கலந்துகொண்டர். அப்போது, திமுக துணைப் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்தற்கு நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தற்போது உள்ள கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவு செய்வார். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றார்.
நீட் தேர்வு பயத்தினால் அரியலூர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து பேசிய அவர், எத்தனை மாணவர்கள் உயிரிழந்தாலும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை. அதனைக் கேள்வி கேட்கும் நிலையில் தமிழ்நாடு அரசும் இல்லை. மேலும், மும்மொழிக்கொள்கை விவகாரம் குறித்து மக்களவையில் கனிமொழி எம்பி பேசவுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கு அமைச்சர் வீரமணி வாழ்த்து