பெரம்பலூர் 4 ரோடு அருகே பெரம்பலூர் நகர திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக 100 அடி உயரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக துணை பொதுச்செயலாளரரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், "பொதுமக்களும், தொண்டர்களும் கரோனா தொற்று காலத்தில் இதுபோல ஒரே இடத்தில் கூடுவதை தவிர்த்திட வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாடு வளமாக இருக்கும். பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முதன்மை மாவட்டமாக மாறும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்பட கட்சியின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணியை சேர்ந்த பெண்கள் திரளாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள் என்னென்ன?