ETV Bharat / state

ஆடி முதல் வெள்ளி; சிறுவாச்சூர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு! - prayer

பெரம்பலூர்: பிரசித்திப்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிறுவாச்சூர் திருக்கோயில்  பக்தர்கள் தரிசனம்
author img

By

Published : Jul 19, 2019, 7:47 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தின் பிரசித்திப்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பூஜைகள் நடைபெறும்.

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறுவாச்சூர் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம்!

இந்நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

அருள்மிகு மதுரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்ட பின்னர் தீபாராதனையும் காட்டப்பட்டது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற மாவு இடித்து மாவிளக்கு வழிபாடு செய்தனர்.

Intro:பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி பக்தி முழங்க தரிசனம் செய்தனர்

Body:பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் இத்திருக்கோவில் இத்திருக்கோவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோவில் ஆனது தன் கணவனை கொன்ற குற்றத்திற்காக பாண்டிய மன்னன் மரணித்த பிறகும் மதுரையை எரித்த கண்ணகியின் சினம் தவிர்த்த புண்ணிய பூமியாக விளங்கி வருகிறது முன்பொரு காலத்தில் செல்லியம்மன் அருள் புரிந்ததாகவும் கண்ணகியே மதுரகாளி அம்மன் காளியம்மன் ஆக மாறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக வரலாறு கூறப்படுகிறது இந்நிலையில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இத்திருக்கோவில் திறந்திருக்கும் பூஜைகள் நடைபெறும் மற்ற நாட்களில் இத்திருக்கோவில் இருந்து அருகில் உள்ள பெரியசாமி மலையில் சுவாமி அருள் புரிவதாக வரலாறு கூறப்படுகிறது இந்நிலையில் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அருள்மிகு மதுரகாளியம்மன் அங்கு உச்சிகால பூஜையில் பால் தயிர் சந்தனம் மஞ்சள் பஞ்சாமிர்தம் பூக்கள் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக்கவசம் சாத்தப்பட்டு உடுக்கு அடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீபாரதனை நடைபெற்றது மேலும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்து மாவு இடித்து மாவிளக்கு வழிபாடு செய்தனர் இந்த திருக்கோவில் வழிபாடு செய்வதன் மூலம் பில்லி சூனிய நீங்கவும் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த அம்மனாக இது கருதப்படுகிறது

Conclusion:ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு மதுரகாளி அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.