பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு 50 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் இதுவரை ஆட்சி மாறி வந்தாலும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கிடைப்பதில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், “தங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை என்றால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட மக்களாகிய நாங்கள் வாக்களிக்க மாட்டோம். மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” எனக் கூறினர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் தொடக்கம்!