பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், பாடாலூர், வெண்பாவூர், பெரிய வடகரை, முருக்கன்குடி, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன. இதனிடையே வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மான் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன.
இந்நிலையில் ஆலத்தூர் வட்டம் காரை பகுதியில் உள்ள பெரிய ஏரியை ஒட்டி 100க்கும் மேற்பட்ட மான்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன. காரை பெரிய ஏரியில் தண்ணீர் இருப்பதே அதற்குக் காரணம். அந்த ஏரிக்கு தண்ணீர் குடிக்க வந்த நான்கு வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று மர்ம விலங்கு கடித்ததில் பலியாகியுள்ளது. மான் இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானின் உடலை மீட்டு ஆராய்ந்து வருகின்றனர்.