பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்ட பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் ஆயிரக்கணக்கான அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது பெய்த தொடர் மழை காரணமாக மருதையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாற்றில் இருந்து வரும் நீர் வயல்களை சூழ்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.
மருதையாற்றினை அகலப்படுத்தாததே, வயல்களில் தண்ணீர் வருவதற்கான காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ரஜினி குறித்து கருத்து கூற விரும்பவில்லை - எம்.பி. கனிமொழி!