ETV Bharat / state

வெண்புழு பாதிப்பால் பயிர்கள் சேதம்...! - Damage to agricultural crops due to maize attack

பெரம்பலூர்: வெண்புழு பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

maize attack
maize attack
author img

By

Published : Nov 28, 2019, 6:20 PM IST

Updated : Nov 28, 2019, 7:23 PM IST

விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம், சிறுதானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு 2018-19ஆம் ஆண்டுகளில் 64 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.

இந்த பயிர்களை படைப்புழு தாக்கியதைத் தொடர்ந்து வெண்புள்ளியும் தாக்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு சேதமடைந்த பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கியது.

இதனிடையே படைப்புழு மீண்டும் தாக்கினால் பயிர் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை சாகுபடி செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டுக்கு 57 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக மீண்டும் வெண்புழு தாக்கி மக்காச்சோள பயிர்கள் வேரில் இருந்து அழித்து வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. இதனிடையே, வெண்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை வேளாண் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு நடத்தினர்.

வெண்புழு பாதிப்பில் இருந்து பயிர்களை ஆரம்ப கட்டத்திலேயே பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்களில் தாக்குதலால் விவசாயிகள் வேதனை

Body:விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மக்காச்சோளம் சின்னவெங்காயம் சிறுதானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன மழையை நம்பியே பெருவாரியான மாநிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர் இன்னிலையில் மக்காச்சோள பயிர்களில் படை தாக்குதலை அடுத்து இந்த ஆண்டு வெண்புள்ளி தாக்குதலால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் மக்காச்சோள பயிர்களுக்கு பிரசித்தி பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2018 19 ஆண்டுகளில் 64 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது அந்த சாகுபடி செய்யப்பட்ட பல பயிர்களில் படைபுழு தாக்குதலால் பெருவாரியான விவசாயிகள் வேதனை அடைந்தனர் மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பிறகு தமிழக அரசு அடைக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளித்தது இதனிடையே படைப்புழு தாக்குதல் பயிர் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற சூழலில் பெரும்பாலான விவசாயிகள் மக்காச் சோளப் பயிர்களை சாகுபடி செய்யாமல் இருந்து வந்த நிலையில் 2019 20 ஆம் ஆண்டிற்கு வேறுவழியின்றி 57 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் மா பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டது படைப்புகள் சமாளிக்க முடியாத இருந்த விவசாயிகளுக்கு தற்பொழுது வெண்புள்ளி தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் வேர்களிலிருந்து தாக்கி அழித்து வருவது பெரும் வேதனையாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர் இந்நிலையில் வெண் புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வேளாண் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு நடத்தினர்

Conclusion:மேலும் ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Last Updated : Nov 28, 2019, 7:23 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.