பெரம்பலூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் பெரம்பலூர் நகர்ப்பகுதி கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு அரிசி கடையையும், மளிகைக் கடையையும் அதன் உரிமையாளர்கள் திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தலைமையிலான அலுவலர்கள் அந்த இரண்டு கடைகளையும் பூட்டி சீல் வைத்து கடையின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இனி எல்லாமே டோர் டெலிவரி!