ETV Bharat / state

கரோனாவுக்கு ரூ.60 லட்சம், ஆதரவற்றோருக்கு ரூ.5 லட்சம் - எம்எல்ஏக்கள் வழங்கினர்

பெரம்பலூர்: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ரூ.60 லட்சமும், ஆதரவற்றோருக்கு உணவளிக்க ரூ.5 லட்சத்தையும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்டி ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

author img

By

Published : Apr 2, 2020, 8:13 PM IST

corona relief fund sponsored by two mlas in perambalur

குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வனும் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செந்துறை, வேப்பூர், ஆலத்தூர் என மூன்று ஒன்றியங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் ரூபாய் 60 லட்சம் நிதியை கொடுக்க முடிவுசெய்தனர்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியரிடத்தில், இருவரும் ரூபாய் 60 லட்சத்திற்கான காசோலையையும், ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளதால் மாவட்டத்திலுள்ள காப்பகம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு உணவு அளிப்பதற்காக தங்களின் சொந்த நிதியிலிருந்து தலா இரண்டரை லட்சம் என மொத்தம் 65 லட்சம் நிதியினை மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலரும், அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.

கரோனாவுக்கு ரூ.60 லட்சம், ஆதரவற்றோருக்கு ரூ.5 லட்சம்

இதையும் படிங்க: நடுவழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: பச்சிளம் குழந்தையுடன் நடந்து சென்ற தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.