பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பெரம்பலூரில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள வருமானவரி அலுவலகம் முன்பு அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![காங்கிரஸ் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:46:37:1593425797_tn-pbl-02-congress-protest-script-vis-7205953_29062020112032_2906f_00500_1045.jpg)
அப்போது, இரண்டு சக்கர வாகனத்தை தள்ளுவண்டியில் இழுத்து காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பெட்ரோல் டீசல் உயர்வு காரணமாக பாமர மக்களின் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.