பெரம்பலூர் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை மற்றும் நிவர் புயல் காரணமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதென மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பெரிய ஏரியில் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பகுதிகளில் நீர்வழிப் பாதைகளில் உள்ள கருவேல மரங்கள், மண் திட்டுகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி, நீர் தங்குதடையின்றி செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
மேலும் வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் இயற்கை இடர்பாடுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டுள்ள பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாவட்டத் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர்!